fbpx

மேடையில் வைத்து கண்டித்த அமித்ஷா..!! சுயமரியாதை இருந்தால் உடனே விலகுங்கள்..!! தமிழிசையை தூண்டிவிடும் காங்கிரஸ்..!!

அமித்ஷா கண்டித்ததை தொடர்ந்து பாஜகவில் இருந்து தமிழிசை உடனே விலக வேண்டும் என கேரளா காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கை விரலை உயர்த்தி கடுமையான முகத்துடன் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பாஜகவில் இருந்து தமிழிசை உடனே விலக வேண்டும் எனவும் கேரளா காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கான ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். இந்த பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் சென்னை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைமையை (அண்ணாமலை) வெளிப்படையாகவே தமிழிசை விமர்சித்து வந்தார். இதற்கு அண்ணாமலை தரப்பும் பதிலடி கொடுத்து வந்தது.

இந்நிலையில் விஜயவாடாவில் இன்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் தமிழிசையும் பங்கேற்றிருந்தார். விழா மேடையில் அமித்ஷா மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வணக்கம் வைத்துவிட்டு தமிழிசை நகர்ந்தார். ஆனால் அமித்ஷாவோ, தமிழிசையை அழைத்தார். அப்போது, கடுமையான முகத்துடன் கை விரல்களை உயர்த்தி கண்டிப்புடன் தமிழிசையிடம் பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அல்லது சமாதானம் சொல்லும் வகையில் தமிழிசையும் அமித்ஷாவிடம் பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பெண்ணை, முன்னாள் ஆளுநரை பொதுமேடையில் எப்படி அமித்ஷா கண்டிக்கலாம்? என்பது விமர்சனம் வைப்போரின் கருத்து. தற்போது இந்த விவகாரத்தில் கேரளா காங்கிரஸும் இணைந்துள்ளது. கேரளா காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பெண்களை பாஜக எப்படி இழிவாக நடத்துகிறது என்பதற்கு இதுதான் சான்று. கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால் தக்க பதிலடி கொடுத்துவிட்டு பாஜகவில் இருந்து விலகியிருப்பார்கள். ஒரு மருத்துவர், முன்னாள் ஆளுநரான தமிழிசை இத்தகைய அவமானங்களை தாங்கிக் கொள்ளக் கூடாது. உடனே பாஜகவில் இருந்து விலக வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Read More : உங்கள் துணைக்கு செக்ஸில் ஆர்வமே இல்லையா..? அப்படினா இதை டிரை பண்ணி பாருங்க..!!

English Summary

Following Amit Shah’s condemnation, the Kerala Congress has insisted that Tamilisai should leave the BJP immediately.

Chella

Next Post

சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு புதிய தொழில்நுட்ப முறையை தொடங்க உள்ளது இந்தியா!!

Wed Jun 12 , 2024
India is thriving towards a more efficient and seamless toll collection system, as the central government and its agencies have claimed.

You May Like