சென்னை, திருவள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 6000 ரூபாய் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் மாதம் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இந்த மாதம் 15ம் தேதி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் பொங்கல் காரணமாக 15- ம் தேதிக்கு முன்பாக ஜனவரி முதல் வாரமாக அந்த மாதத்திற்கான ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 2000 ரூபாய் உங்களுக்கு அரசாங்கம் வழங்கும்.
வருடம் தோறும் பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத்தொகை வழங்கப்படும். கரும்பு, வெல்லத்திற்கு பதிலாக பணமாக பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த பரிசுத்தொகை இந்த வருடமும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1,000 ரூபாய் வழங்க அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரூபாய் 3,000 மக்களுக்கு தமிழ்நாடு முழுக்க அடுத்த 4 வாரங்களில் வழங்கப்பட உள்ளது.
இதோடு சென்னை, திருவள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 6000 ரூபாய் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 9,000 ரூபாய் சென்னை மக்கள் பெற உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத்தொகை ஒரு வாரத்தில் வழங்கப்படும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.