fbpx

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு செய்ய போகும் நபர்களுக்கு குட் நியூஸ்…! முழு விவரம்

இன்று அமாவாசை முன்னிட்டு பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தை மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது தை அமாவாசை நாளான இன்று மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதனை ஏற்று தை அமாவாசை நாளான இன்று மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும்.

முக்கியமாக 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

An announcement has been made that additional reservation tokens will be given to those who register the deed.

Vignesh

Next Post

அழுக்கான உங்கள் பழைய டீ வடிகட்டியை புதுசு போல் மாற்ற வேண்டுமா? அப்போ சட்டுன்னு இதை செய்யுங்க..

Wed Jan 29 , 2025
simple tips to clean your old tea filter

You May Like