fbpx

“இனிமேல் நம்பிக்கையில்லை அம்மா………”! 24 வயது இளைஞன் வேலை நீக்கம் செய்ததால் உருக்கமான கடிதம் எழுதி தூக்கிட்டு தற்கொலை!

வேலை நீக்கம் செய்யப்பட்டதால் மனம் உடைந்த 24 வயதில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் வயது 24. இவர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தற்போது ஐடி நிறுவனங்கள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருவதால் அந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக விக்னேஸ்வரன் வேலை செய்த தனியார் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவரை பணியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் நீக்கியது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக எந்தவித பணியுமில்லாமல் வீட்டில் தான் இருந்திருக்கிறார் விக்னேஸ்வரன். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார் விக்னேஸ்வரன். இதன் காரணமாக காவல்துறையை தொடர்பு கொண்ட அவரது குடும்பத்தினர் விக்னேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டது. அந்த விசாரணையில் விக்னேஸ்வரன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தனக்கு இனி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தனது தாய்க்கு உருக்கமாக எழுதியுள்ள விக்னேஸ்வரன் ” அம்மா என்னை மறந்து மன்னிச்சிடுங்க அம்மா நான் போறேன் உடம்ப பாத்துக்கோங்க என உருக்கமாக எழுதி இருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில் தனது ஏடிஎம் பாஸ்வேர்ட் மற்றும் செல்போனின் பாஸ்வேர்ட் ஆகியவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

Baskar

Next Post

போலீஸையே வெட்டி விட்டு தப்ப முயன்ற குற்றவாளி! சுட்டு பிடித்த போலீஸ்! தூத்துக்குடியில் பரபரப்பு !

Sun Mar 12 , 2023
தூத்துக்குடியில் போலீசாரை வெட்டி விட்டு தப்பிச் செல்லும் என்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய நபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கிறது காவல்துறை. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் பட்ட பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தூத்துக்குடியைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் அவரது கடைக்கு முன்பாக பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் முக்கிய […]

You May Like