fbpx

அடுத்த ஆப்பு… இனி வாகனங்களில் பெட்ரோல், டீசல் அளவாக பயன்படுத்த வேண்டும்…! அரசு போட்ட அதிரடி உத்தரவு…!

காவல்‌ வாகளங்களிள்‌ பயன்பாட்டிற்கு ஏற்ப பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ அளவை அறிவுறுத்தியபடி நிர்ணயித்து கொள்ளுமாறு ஆணைவழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த காவல்துறை தலைமை இயக்குனர் வெங்கடா ராமன் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று அறிக்கையில் எரிபொருள்‌ விலை உயர்வினையும்‌ தற்போதைய எரிபொருள்‌ நெருக்கடிகளையும்‌ கருத்திற்‌ கொண்டு எரிபொருள்‌ சிக்கனத்தை மத்திய மற்றும்‌ மாநில அரசுகள்‌ வலியுறுத்தி வருகின்றன. மேலும்‌ அரசு நிர்ணயம்‌ செய்துள்ள அளவைவிட அதிக எரிபொருள்‌ பயன்படுத்தினால்‌ அவ்வாறு பயன்படுத்திய அதிக எரிபொருளுக்கு பின்ளேற்பாணை வழங்கப்பட மாட்டாது எனவும்‌, அதிகமாக பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கு சம்பந்தப்பட்ட வாகனம்‌ பயன்படுத்தப்படும்‌ அலுவலரிடமிருந்து பணம்‌ பிடித்தம்‌ செய்யப்படும்‌ எனவும்‌, மேற்கண்ட அரசாணையில்‌ தெரிவித்துள்ளதால்‌ காவல்‌ துறை வாகளங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பிற்கு மிகாமல்‌ திட்டமிட்டு, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும்‌ வருடாந்திரமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும்‌, காவல்‌ துறையில்‌ இயங்கும்‌ அனைத்து வாகனங்களும்‌, அவை இயங்கும்‌ எல்லையின்‌ அடிப்படையில்‌, மேற்கண்ட வாகனங்கள்‌ மாத எரிபொருள்‌ உச்ச வரம்பினை பயன்படுத்தும்படி அனைத்து பிரிவு காவல்‌ அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தில்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பை விட எக்காரணத்தை முன்னிட்டும் கூடுதலாக எரிபொருள்‌ பயன்படுத்தக்கூடாது. கூடுதல்‌ எரிபொருள்‌ பிடித்தம்‌ செய்தால்‌ அத்தொகையினை வாகளம்‌ உபயோகித்த அதிகாரிகளின்‌ ஊதியத்தில்‌ இருந்து பிடித்தம்‌ செய்யப்பட்டு அரசு கணக்கில்‌ செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அப்டேட்... மருத்துவமனையில் உள்ள இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை...! வெளியான புதிய தகவல்...!

Wed Aug 31 , 2022
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா மதுரை விமான நிலையத்தில் கடந்த வாங மயங்கி விழுந்தை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது குணமடைந்து வரும் நிலையில், தனது ரசிகர்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி தெரிவித்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை சமிபத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “என் அன்பான தமிழ் மக்களே, நான் உங்கள் அன்புக்குரிய பாரதிராஜா. உடல்நலக் குறைவால் சமீபத்தில் […]

You May Like