நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் பாதுகாப்பு இல்லை என்று நினைத்திருந்தால் தற்போது நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் விலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. டெல்லியைச் சார்ந்த தெரு நாய் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது நாட்டை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. பகுதியில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தெரு நாய் ஒன்றைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ இணையதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வீடியோ தொடர்பாக அப்பகுதி மக்கள் ஹரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து அதில் இருக்கும் நபரை பிடிப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மேலும் விலங்குகள் நல பாதுகாப்பு பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோவை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காமவெறி பிடித்தவர்களின் பார்வையில் பெண்களும் குழந்தைகளும் தான் பாதிக்கப்பட்டிருந்தார்கள், ஆனால் தற்போது நாய் போன்ற விலங்குகளும் அவர்களின் இச்சைக்கு பலியாகி வருவது வேதனை அளிக்கிறது.