நடுவானில் விமானத்தில் பிரசவம் நடந்து கேள்விப்பட்டிருக்கிறோம் ரயில் பயணங்களின் போது பிரசவம் ஆகியும் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது ஆந்திர மாநிலத்தில் பைக்கில் செல்லும் போது பெண் ஒருவருக்கு பிரசவமாகி இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சில பகுதிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போக்குவரத்து வசதிகள் ஆகியவை எட்டா கனியாகவே இருக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் உள்ள அல்லூரி மாவட்டத்தைச் சார்ந்த சிந்தாத பள்ளியில் தேவி என்ற பெண்ணுக்கு தான் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பிரசவமாகிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இந்த பெண் பிரசவ வலி ஏற்படவே ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாக இருக்கிறது. இந்தப் பெண்ணிற்கும் பிரசவ வலி அதிகமானதால் அவசர தேவைக்காக பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவுச் செய்து அவரது கணவனின் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அந்தப் பெண்ணுக்கு பிரசவமாகி இருக்கிறது. அந்தப் பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.