fbpx

போதை ஒழிப்பு மையத்தில் தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்! தலை கீழாக கட்டி இரும்பு பைப்பில் அடித்து கொலை!

குஜராத் மாநிலத்தில் போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞரை அந்த மையத்தைச் சார்ந்த ஏழு பேர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொண்டு அறக்கட்டளை ஒன்றின் சார்பாக நடத்தப்படும் ஜியோனா போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த மையத்தில் குஜராத் மாநிலம் மெஹ்னாவைச் சார்ந்த கார்த்திக் சுதர் என்ற இளைஞர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் அவர் இறந்ததாகவும் அவரது இறப்பு இயற்கையானது என போதை ஒழிப்பு மையத்தினர் தகவல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அந்த இளைஞரின் மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்த காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

இச்சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல் ஆய்வாளர் மெகுல் பட்டேல் கூறுகையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஹர்திக் சுதர் குளியலறைக்குச் சென்று தனது மணிக்கட்டை பிளே டால் வெட்ட முயன்றுள்ளார். அதனால் கோபமடைந்த மேலாளர் சந்தீப் படேல் உட்பட ஏழு பேர் அவரை தலைகீழாக பிடித்து கடினமான இரும்பு பைப்புகளைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹர்திக் சுதர் மரணமடைந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் யாரேனும் இதுபோன்று தற்கொலைக்கு முயற்சி செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் விதமாக ஹர்திக் சுதரின் அந்தரங்கப் பகுதிகளில் குழாயின் மூலமாக சூடான திரவத்தை காய்ச்சி ஊற்றியதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவங்கள் தொடர்பாக உண்மையை கண்டறிய சிசிடிவி காட்சிகள் உதவியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளான போதை ஒழிப்பு மையத்தின் மேலாளர் சந்தீப் படேல் உட்பட ஏழு பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.

Rupa

Next Post

திருமணமாகி 2 வாரங்களிலேயே கணவரை பற்றி தெரிந்த விஷயம்!உருக்கமான தற்கொலை கடிதம்!

Sat Mar 11 , 2023
கரூர் அருகே பொரணியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமான இரண்டு வாரங்களில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மலை பாரதி நகரைச் சார்ந்தவர் ராக பிரியா. 27 வயதான இவருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி சுதர்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இரண்டு வாரங்களேயான நிலையில் ராக பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ள […]

You May Like