fbpx

குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை…! தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை…!

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பார்க்க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில் இத்திட்டம் மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது மகளிர் உரிமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்...! மத்திய அரசு முக்கிய தகவல்...!

Tue Aug 23 , 2022
மருத்துவமனைகள், சுகாதார நல மையங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார ஆணையம் வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடர்பான மென்பொருள், அதற்கான திட்டமிடுதல், மதிப்பீடு, தகவல் தொடர்பு சாதன வன்பொருள் கொள்முதல் ஆகியவற்றை இந்த வன்பொருள் கொள்கை விளக்குகிறது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் முதல்படியே மருத்துவமனைகள் டிஜிட்டலை நோக்கி முன்னேறுவதுதான். மேலும், சுகாதார சேவைகளின் […]

You May Like