fbpx

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.. மத்திய அரசு எச்சரிக்கை..

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பயனர்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.. ஆம்.. மத்திய அரசு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை எச்சரித்துள்ளது.. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. Android OS-ல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும், இதனால் சைபர் குற்றவாளிகள், உங்கள் சாதனத்தில் உள்ள முக்கியமான தகவல்களை அணுக அனுமதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது..

நீங்க புதிய ஸ்மார்ட்போன் வாங்கப் போறீங்களா..? அப்படினா கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Android OS-ல் உள்ள பாதிப்புகள், கட்டமைப்பு, (Framework) , மீடியா கட்டமைப்பு (Media Framework) , கணினி கூறுகள் (System Component,) கூகுள் பிளே சிஸ்டம் ( updates from the Google Play system) , கர்னல், மீடியாடெக் கூறுகள் (Kernel, MediaTek components) , யூனிசோக் கூறுகள் (Unisoc components), குவால்காம் கூறுகள் (Qualcomm components) போன்றவற்றில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த பாதிப்புகள் திறம்பட பயன்படுத்தப்பட்டால், சைபர் குற்றவாளிகள் முக்கியமான தகவல்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் இது பழைய OS இல் இயங்கும் ஸ்மார்ட்போன்களை மட்டும் பாதிக்காது. அதற்கு பதிலாக, சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்புகளாக, ஆண்ட்ராய்டு 13, 12, 12 எல், 11 மற்றும் 10 வரை இயங்கும் பல ஸ்மார்ட்போன்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உங்கள் சாதனம் புதுப்பிப்பதன் மூலம், இந்தச் சிக்கல்களைத் தீர்க்க முடியும்..

எனவே ஸ்மார்ட்போனின் Android பதிப்பை, சரிபார்த்து, அதை புதுப்பிக்க வேண்டும் என்பதை Android நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அந்தந்த நிறுவனங்களால் வெளியிடப்படும் சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு உங்கள் ஸ்மார்ட்போனை எப்போதும் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும்.

Maha

Next Post

சக காவல் துறை அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் காவலர்…..! அதிரடியாக பணி நீக்கம் செய்த காவல்துறை….!

Sat Feb 11 , 2023
திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வீரகாந்தி. இவர் தன்னுடைய காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார் ஆகவே ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கு அப்போதைய ஏடி.எஸ்.பி லாவன்யா நியமனம் செய்யப்பட்டார். […]

You May Like