fbpx

“ அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட்..” அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்…

தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ரஃபேல் வாட்சின் பில்லை தர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. இதை தொடர்ந்து ரசீது எங்கே என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி, ரஃபேல் கடிகாரத்தின் ரசீதுடன், தனது சொத்து மதிப்புடன் வெளியிடப்படும் என்றும், தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து, நான் ரஃபேல் வாட்சை வாங்கினேன்.. 2021 மார்ச்சில் ரபேல் வாட்சை வாங்கிய ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார்.. எனது வங்கிக்கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் வெளியிடுகிறேன்.. வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள்..” என்று தெரிவித்தார்.. மேலும் தனது நண்பர் கொடுத்த ரஃபேல் வாட்ச்சின் விலை ரூ.3 லட்சம் என்று அதற்கான ரசீதையும் அண்ணாமலை காட்டினார்..

மேலும், ஏற்கனவே அறிவித்ததைப் போன்று திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல்களும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்…

இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியல் குறித்து திமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் இதுகுறித்து பேசிய போது பாஜகவினருக்கு தொடர்புடைய பல்வேறு மோசடி புகார்கள் மீதான, மக்களின் பார்வையை திசை திரும்பும் நோக்கில், அண்ணாமலை செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.. அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் ஒரு பொருட்டே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Maha

Next Post

TIME பத்திரிகையின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள்.. 2 இந்தியர்கள் மட்டுமே பட்டியலில் உள்ளனர்..

Fri Apr 14 , 2023
டைம் பத்திரிகையின் 2023 ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் பிரபல இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி மட்டுமே இடம்பிடித்துள்ளனர். எஸ்எஸ் ராஜமௌலிக்கு ஆலியா பட் சுயவிவரத்தை எழுதிய நிலையில், நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானின் சுயவிவரத்தை எழுதினார். ஆலியாவின் பதிவில் “ராஜமௌலி தனது பார்வையாளர்களைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளார்.. தனது கதைகளில் சரியான துடிப்பு மற்றும் திருப்பங்களை எவ்வாறு […]

You May Like