பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலாக தமிழிசை அல்லது வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதற்கிடையே, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். அவ்வாறு இருந்தால், மாநில தலைவர் பதவியை ராஜிமானா செய்வேன் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நோக்கம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலாக தமிழிசை அல்லது வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – பாஜக இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அண்ணாமலையை நீக்க எடப்பாடியும், எடப்பாடியின் தலைமை வேண்டாம் என அண்ணாமலையும் கூறி வருவதாக தெரிகிறது. இதனால், கூட்டணியை சுமூகமாக முடிக்க அண்ணாமலையை மாற்றிவிட்டு, அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.