fbpx

சாட்டை சுற்றிய அண்ணாமலை…! இரண்டு பாஜக மாவட்ட தலைவர்கள் அதிரடி நீக்கம்…!

தமிழக பாஜகவில் இருந்து இரண்டு மாவட்டத் தலைவர்கள் நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பாஜகவில் இருந்து இரண்டு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், திருவாரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர், திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் அவர்கள் வகித்து வரும் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவதாக தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி தாளாளர் உள்ளிட்ட 4 பேரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலைகள் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட தலைவர் மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

English Summary

Annamalai has ordered the removal of two district presidents from Tamil Nadu BJP.

Vignesh

Next Post

ஹோட்டல் அறையில் பெண் போலீசுடன்  சிக்கிய மூத்த காவல்துறை அதிகாரி!! கான்ஸ்டபிளாக மாறிய DSP..!!

Sun Jun 23 , 2024
The Uttar Pradesh Police has demoted Deputy Superintendent Kripa Shankar Kannaujiya to the rank of constable, three years after he was caught in a compromising situation with a female constable at a hotel.

You May Like