fbpx

‘DMK FILES 3’ ரிலீஸ் செய்த அண்ணாமலை.! 2ஜி ஊழல் குறித்த ஆ.ராசாவின் முக்கிய உரையாடல்.!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து வரும் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் தொலைபேசி உரையாடல்களையும் பகிர்ந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழக கட்சியை சேர்ந்தவர்களின் சொத்து கணக்கு என்ற ஆவணத் தொகுப்பை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு டிஎம்கே பைல்ஸ் 2 என்ற பெயரில் 2ஜி அலைக்கற்றை ஊழல் சம்பந்தமான ஆவணங்களை தனது ‘X’ வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார் அண்ணாமலை..

தற்போது ‘டிஎம்கே பைல்ஸ் 3’ ரிலீஸ் செய்திருக்கிறார் அண்ணாமலை. இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழகத்தின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் மற்றும் அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா ஆகியோர் இணைந்து மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை திசை திருப்பியதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ஆ ராசா மற்றும் ஜாபர் சேட் பேசும் உரையாடலையும் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

தற்போது பதிவேற்றப்பட்டிருக்கும் காணொளியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் ஜாபர் சேட் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் இடம் பெற்று இருக்கிறது. அந்த உரையாடலில் சில பண பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றிருக்கிறது. தன்னிடம் இருக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தது குறித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பேரணிகளுக்காக செலவு செய்த விவரங்களையும் ஆ ராசா பகிர்ந்திருக்கிறார். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆடியோ அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

மாரடைப்பை தடுக்கும் அன்னாசிப்பழம்.! வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?

Sat Jan 27 , 2024
பொதுவாக பழங்களில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் அன்னாசிப்பழத்தில் நம் உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல்வேறு வகையான நோய்களையும் தீர்க்கும் சக்தி உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அண்ணாச்சி பழத்தை உண்பதால் ஏற்படும் நன்மைகள்1. வைட்டமின் சி அண்ணாச்சி பழத்தில் நிறைந்துள்ளதால் இது […]

You May Like