fbpx

இரண்டே நாள் பொறுத்திருங்கள்…! அதிமுக பிரச்சனை குறித்து அண்ணாமலை சூசகம்…!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக அமைச்சக தலைவர் அண்ணாமலை; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் காலம் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகான இடைத்தேர்தல்களில் 80% ஆளும்கட்சி தான் வென்றுள்ளது. ஆனால் பொதுத்தேர்தலில் தோற்றிருப்பார்கள்‌. இந்த ஒரு இடைத்தேர்தலால் எதுவும் மாறப்போவது இல்லை. இந்த தேர்தலில் பாஜக தங்களை நிரூபிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. முக்கியத் தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். வேட்புமனு தாக்கல் செய்ய காலம் உள்ளது.

திமுகவை எதிர்க்க ஒரு பலமான வேட்பாளர் தேவை. அதை தான் பாஜக விரும்புகிறது. பிரிந்து பிரிந்து நின்று வாக்குகளை சிதறடிப்பதை விட, ஒற்றுமையாக ஒரு பலமான வேட்பாளரை நிறுத்துவது தான் நல்லது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் பிரச்சனை என்பது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. எங்களை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரிவினையும் இருக்கக் கூடாது. அதனால் ஒரு இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்...! ‌

Wed Jan 25 , 2023
ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, […]

You May Like