fbpx

Exam: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு… தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.‌‌..!

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து, தனித்தேர்வர்கள் டிசம்பர் 17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

இதுதவிர தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வு கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

English Summary

Announcement that students of 10th, 11th and 12th standard can apply for the public exam… separate exam

Vignesh

Next Post

இன்னும் 5 வருடங்களில் ரூ. 600 லட்சம் கோடி ஆக இந்திய பொருளாதாரம் உயரும்!. ஜெய்சங்கர் நம்பிக்கை!

Mon Dec 9 , 2024
Jaishankar: 2030க்குள் 600 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும், என நம்பிக்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் நடந்த மணிமா விவாத மன்ற நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையில், வர்த்தகத்தை பாதிக்கும் என்பதால், பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமையை இந்தியா குறைக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். இதன் காரணமாக கடல் வழித்தடங்கள் மாறுவதும், வர்த்தகச் செலவு அதிகரிப்பதும் கவலை அளிப்பதாக உள்ளது என்றார். மேற்கு […]

You May Like