fbpx

திருமணமான பெண்ணுடன் மற்றொரு ஆணுடன் இருக்கும் உறவை ஏற்றுக் கொள்ள முடியாது.. நீதிமன்றம் உத்தரவு..!

ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கு சென்ற 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மணிஷ் அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து செய்து வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அடுத்து பெண்ணும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வந்த பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனால் மனிஷ் மறுத்துள்ள நிலையில், ஏமாற்றமடைந்த பெண் காவல் நிலையத்தில் மணிஷ் மீது புகார் அளித்துள்ளார்.

வழக்கானது நீதிமன்றத்தில் வந்த போது நீதிபதி கூறியதாவது, அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்தும், இது போன்ற உறவில் ஈடுபட்டுள்ளார். ஆகையால், இந்த வழக்கை பலாத்கார பிரிவின் கீழ் வாதத்திற்காக அடிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். 

இதனால் இந்த வழக்கை கீழ் கோர்ட் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் திருமணமான பெண்ணை ஒரு ஆணால் கவர்ந்திழுக்க முடியாது. மேலும் இந்த செயலை பலாத்காரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 

Rupa

Next Post

’எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க’..!! பரிகார பூஜையால் பறிபோன நகை, பணம்..!! மொத்தமும் அபேஸ்..!!

Mon Dec 12 , 2022
திருவனந்தபுரத்தில் பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் மோசடி செய்த போலி பெண் மந்திரவாதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியைச் சேர்ந்த விஸ்வாம்பரன் என்பவரது குடும்பத்தில் சிலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால், அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். மன நிம்மதி தேடி மருத்துவரை அணுகாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை அணுகியுள்ளார். அதற்கு அவரோ, சில […]
’எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க’..!! பரிகார பூஜையால் பறிபோன நகை, பணம்..!! மொத்தமும் அபேஸ்..!!

You May Like