fbpx

“75 பவுன் நகை போட்டும் பத்தல.”! கேரளாவில் மீண்டும் ஒரு வரதட்சணை தற்கொலை.! தொடரும் கொடூரம்.!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரதட்சனை கொடுமையால் மேலும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை அடுத்த திருவல்லம் என்ற பகுதியில் சஹீனா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கணவர் மற்றும் குடும்பத்தாரின் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக இறந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தின் போது வரதட்சணையாக ஷஹீனாவிற்கு 75 பவுன் நகை போட்டதாக தெரிவித்திருக்கும் அவரது பெற்றோர் ஷகீனாவின் கணவர் நவ்ஃபல் மற்றும் அவரது மாமியார் சுனிதா ஆகிய இருவரும் தங்களது மகளை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக புகார் தெரிவித்துள்ளனர். அவர்களது கொடுமை தாங்க முடியாமல் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. படிப்பறிவு மிக்க கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் வரதட்சணை தற்கொலைகள் வேதனை அளிப்பதாக இருக்கிறது.

Next Post

உங்களையும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்..!! ஏன் தெரியுமா..?

Wed Dec 27 , 2023
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையாலும், குறிப்பிட்ட சேவையை நிறுத்தியதாலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பணியாளர்களை பிரபல பேடிஎம் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. பிரபல பே.டி.எம். நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 முதல் 15 சதவிகித ஊழியர்களுக்கு ஆகும் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், பணியும் சிறப்பாக முடிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பணித்திறன் அடிப்படையில் […]

You May Like