fbpx

தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை ஜூன் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்…!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-2025-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.

8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 10.05.2024 முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெற தற்போது கடைசி தேதி 07.06.2024 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 13.06.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இம்மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் itiadmission2024@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் 9499055689 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

English Summary

Application deadline for Apprenticeship students is 13th June.

Vignesh

Next Post

விமானப் பயணத்தின்போது இந்த பொருள்களை எடுத்துச் செல்ல கூடாது..!! முழு விவரம் இதோ..

Sat Jun 8 , 2024
There are regulations that prohibit us from carrying many items on the plane. If carried excessively it can result in various hazards. Let's see what those prohibited items are.

You May Like