fbpx

முக்கிய அறிவிப்பு…! 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்…!

10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

இன்று முதல் ஜனவரி 10-ம் தேதி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று இணைய வழியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். டிச. 31, ஜனவரி 1, ஜனவரி 7 ஆகிய நாட்கள் நீங்கலாக இடைப்பட்ட தேதிகளில் அரசு தேர்வுகள் துறை சார்பில் மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு காலை 11 முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்கள், ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 500 ஆன்லைனில் தட்கல் முறையில் செலுத்த வேண்டும். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மைய விவரங்கள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தகுதிகளை www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

நேரடியாக மத்திய அரசு மரியாதை...! அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை...!

Fri Dec 29 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், தேமுதிக கட்சியினர், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்தனர். விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து அண்ணாசாலை தீவுத்திடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 […]

You May Like