அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் 2014 முதல் சேர்க்கை செய்யப்பட்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு நவம்பர் 2022-ல் நடைபெற உள்ளது. இத்தேர்வில் 2014 முதல் 2017 வரை சேர்க்கை செய்யப்பட்ட பருவமுறை பயிற்சியாளர்கள் மற்றும் 2018 முதல் 2021 வரை சேர்க்கை செய்யப்பட்ட ஆண்டு முறை பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் பயிற்சியாளர்களின் நலன்கருதி பருவமுறைத் தேர்வில் நடைமுறையில் உள்ள 5 Attempt தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கும் அரிய வாய்ப்பாக தற்போது தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பயிற்சி காலத்தை நிறைவாக முடித்து தேர்ச்சி அடையாத தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று 09.11.2022-க்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 82201 10112 என்ற எண்ணிலோ அல்லது துணை இயக்குநர் 7முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சேலம் – 636007 என்ற முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.