ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே பள்ளிப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகின்றது.சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் பள்ளிக்கு வேன் மூலமாக குழந்தைகளை அனுப்புகின்றனர். சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்து பேர் பள்ளிப்பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மாணவர்களை உடனடியாக கீழே இறக்கினார். தீ மளமளவென பரவி பேருந்து கொளுந்துவிட்டெரிந்தது. இதனால் பேருந்து தீக்கிரையானது.
ஓட்டுனர் துரிதமாக செயல்பட்டு மாணவர்களை கீழே இறக்கியதால் , பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.