fbpx

மின் கட்டணம் செலுத்தப் போறீங்களா..? கூடுதல் கட்டணம் வசூல்..!! எதற்காக தெரியுமா..? மின்சார வாரியம் விளக்கம்..!!

மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு கூடுதல் வைப்பு தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டு வருவது பலரையும் கலக்கமடைய வைத்துள்ளது. இது குறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco), தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) என 2 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வீடாக சென்று மின் மீட்டர்களில் பதிவாகும் ரீடிங்குகளை கணக்கெடுக்கும் பணிகளை Tangedco மேற்கொண்டு வருகிறது. இதற்காக மின் கணக்கீட்டாளர்களை தனியாக நியமித்து பணிகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில், மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கும் நோக்கில், தற்போது டிஜிட்டல் மீட்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. கூடிய விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக இதன் சேவையும் ஆரம்பமாகிறது.. அதன்பிறகு மின் கணக்கீட்டாளர்கள் தேவையில்லை… ஸ்மார்ட் மீட்டரில் இருக்கும் சிம் கார்டு போன்ற அமைப்பால் குறிப்பிட்ட அளவிற்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி பல்வேறு வசதிகளை மின்வாரியம் அறிமுகப்படுத்தி வருகிறது.

இருப்பினும், தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே, கூடுதலாக மின் கட்டணம் வந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், முதலில் ஒரு கட்டணமும், பிறகு சில நாட்கள் கழித்து கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்கப்படுவது நுகர்வோரிடையே பலவித கேள்விகளை எழுப்பி வருகிறது. இதற்குதான், தற்போது மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ”தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய மின் இணைப்பு வழங்கும்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து பதிவு கட்டணம், வைப்புத் தொகை, வளர்ச்சி கட்டணம் என பல வகைகளில் கட்டணம் வசூலிக்கிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி வைப்புத்தொகை, தொழிற்சாலைகளுக்கு ஓராண்டுக்கு ஒரு முறையும் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, மின் இணைப்பு பெறும்போது குறிப்பிட்டிருந்ததை விட அதிக மின்சாரம் பயன்படுத்துவோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படுகிறது. 2021இல் தாழ்வழுத்த பிரிவில் அதிக மின்சாரம் பயன்படுத்திய வகையில் 36 லட்சம் வீடுகளில் 500 கோடி ரூபாய் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்க திட்டமிடப்பட்டது. அது கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. அந்த திட்டம்தான் இப்போது மறுபடியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே பலருக்கு கூடுதல் மின் கட்டணம் வர காரணமாகும். இந்த அறிவிப்பு, மின்சாரம் வேண்டி விண்ணப்பிக்கும்போது தெரிவித்த மின் உபயோகத்தை காட்டிலும் கூடுதலாக உபயோகம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த டெபாசிட் கட்டணம் கடைசி ஓராண்டில் பயன்படுத்திய மின்சார கட்டணத்தின் சராசரியை கணக்கிட்டு வசூலிக்கப்படும்” என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போது முதல் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி துவங்கி இருக்கிறது. இந்த தொகை குறித்த விவரங்கள் மற்றும் இந்த மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரசீதில் குறிப்பிடப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, மின் கட்டணம் மறுபடியும் உயர்வதாக தகவல்கள் பரவி வருவது, பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது.

Chella

Next Post

மாணவர்களே..!! நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15ஆம் தேதி வெளியீடு..? வெளியான முக்கிய தகவல்..!!

Wed Jun 7 , 2023
நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தாண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு ஜூன் 6ஆம் தேதி […]

You May Like