கண்ணாடி அணிவதால் மூக்கில் ஏற்படும் தழும்பை எளிமையாக நீக்குவதற்கான சில குறிப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கண்ணாடி அணிவது நம்மில் பலரின் வாழ்க்கையில் கட்டாயமாக உள்ளது. ஆனால், கண்ணாடி அணிவதை நம்மில் பலர் விரும்புவதில்லை. ஏனென்றால், கண்ணாடியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் மூக்கில் அசிங்கமாக ஏற்படும் தழும்பு தான் காரணம். அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது நிரந்தரமாக இருக்கும். கண்ணாடி அணிவதால் மூக்கில் ஏற்படும் தழும்பை எளிமையாக நீக்குவதற்கான சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை அகற்றும் பண்பு உருளைக்கிழங்கில் காணப்படுகிறது. இந்த வகையில் இந்த கிழங்கினை மசித்து, தழும்புகள் மீது தேய்த்து மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.சரும தளர்வுகளை தடுக்கும் வெள்ளிரிக்காயினை மசித்து, பேட்ஸ் போல் அரைத்து தழும்புகளின் மீது பயன்படுத்தி வர நல்ல மாற்றம் தெரியும்.அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட கற்றாழை ஜெல்லினை, தழும்புகள் உள்ள மூக்கின் மீது தேய்த்து மசாஜ் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.சருமத்தின் இறந்த செல்களை அகற்றும் பண்ப தக்காளியில் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த பழத்தை கொண்டு தழும்புகளின் மீது மசாஜ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட ரோஸ் வாட்டரினை, கண் கண்ணாடி தழும்புகளின் மீதி தேய்த்து மசாஜ் செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.1 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, கண் கண்ணாடி தழும்புகளின் மீது தடவி 15 நிமிடங்களுக்கு உலர விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்துவிட நல்ல பலன் கிடைக்கும்.ஆரஞ்சு பழ தோலினை நன்கு உலர வைத்து பின் பொடியாக அரைத்துக்கொள்ளவும். பின் சிறிதளவு பாலுடன் சேர்த்து பேஸ்ட் கரைத்து தழும்புகள் மீது பயன்படுத்த நல்ல மாற்றம் தெரியும். வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு பயன்படுத்த, சருமம் பொலிவுறும். அந்த வகையில் எலுமிச்சை சாற்றினை சிறதளவு தண்ணீருடன் சேர்த்து தழும்புகள் மீது பயன்படுத்தலாம்.