fbpx

உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டம் – அர்ஜென்டினாவில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை சிறப்பாக கொண்டாடுவதற்காக அர்ஜென்டினாவில் இன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Buenos Aires

புவெனஸ் ஐரிஸ்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான பைனலில், அசத்திய அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெனால்ட்டி ஷூட் அவுட் வெற்றியின் மூலம் 6 வெற்றிகளுடன் அதிகப்படியான பெனால்ட்டி ஷூட் அவுட்களில் வென்ற அணி என்ற பெருமையை அர்ஜென்டினா பெற்றது. உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் அர்ஜெண்டினா அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியாவில் அர்ஜெண்டினாவிற்கு என்று தனி ரசிகர் ஆர்மியே உள்ளது. கேரளா, புதுச்சேரி தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வெற்றிக்கொண்டாட்டங்களைசமூக வலைதளங்கள் மூலம் நாம் காணமுடிந்தது.

நம்ம ஊரிலேயே இவ்வளவு கொண்டாட்டம் , கும்மாளம் என்றால் கோப்பைக்கு சொந்தகார நாடான அர்ஜெண்டினாவில் சொல்லவா வேண்டும். அடேங்கப்பா என்று வாயை பிளக்கும் அளவுக்கு அந்த நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துபோயுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க உலகக் கோப்பை வெற்றியை கொண்டாட நினைத்த அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு, புவெனஸ் அயர்ஸில் உள்ள ஒபெலிஸ்க் வளாகத்தில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாட அர்ஜென்டினா அரசாங்கம், டிசம்பர் 20ஆம் தேதியான இன்று, பொதுவிடுமுறையாக அறிவித்தது. இதனால் முழு நாடும் “அர்ஜென்டினா அணிக்காக தங்களின் ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும்” என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு லட்ச கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். உலக சாம்பியன் பட்டத்தை வென்றதை ரசிகர்களுடன் கொண்டாட அர்ஜெண்டினா அணியினரும் ஒபெலிஸ்கிற்கு செல்கின்றனர்.

Kokila

Next Post

இணையதளத்தின் மூலமாக ஆதார் அட்டையில் எந்தெந்த விவரங்களை நாமே மாற்றிக் கொள்ளலாம்?

Tue Dec 20 , 2022
தொடக்கத்தில் இந்த ஆதார் கார்டு என்ற ஒரு அடையாள ஆவணம் வருவதற்கு முன்னர் இது எதற்காக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது என்று யாருக்குமே தெரியாது. அதோடு ஏதோ அரசாங்கத்தில் வழங்குகிறார்கள், நாமும் வாங்கி வைத்துக் கொள்வோம் என்ற நினைப்பில் தான் அனைவரும் இந்த ஆதார்கார்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்து இருந்தார்கள். ஆனால் பின்னாளில் இந்த ஆதார் கார்டு இல்லை என்றால் எதுவுமே இல்லை என்று ஆகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஆதார் […]

You May Like