fbpx

பயங்கரம்…! ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டுகளை வெடிக்கச் செய்த ராணுவ அதிகாரி…! ஐந்து பேர் படுகாயம்….!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமுக்குள் ராணுவ அதிகாரி ஒருவர் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிகாரிகளின் தகவல் படி, சம்பவத்தில் குறைந்தது ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, முகாமில் உள்ள ஒரு ஆயுதக் கிடங்கில் துப்பாக்கி முனையில் சில வீரர்களை பணயக்கைதிகளாக அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லை மாவட்டத்தின் தனமண்டி பகுதிக்கு அருகில் உள்ள ராணுவ முகாமுக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், மேஜர் அந்தஸ்தில் உள்ள ராணுவ அதிகாரி என்றும், முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் தஞ்சம் அடைந்ததாகவும், மேலும் சில ராணுவ வீரர்களும் அதிகாரியால் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இராணுவ அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுதங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தை இராணுவம் காலி செய்ததாக சொல்லப்படுகிறது. காயமடைந்தவர்கள் இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதிகாரிகளில் ஒருவரின் நிலை மோசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Vignesh

Next Post

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...! மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை...!

Fri Oct 6 , 2023
தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் […]

You May Like