டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆடவர், பெண்கள் பிரிவில் தங்கம் உறுதியாகி உள்ளது.
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 9-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் ஆர்.பிக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். இதையடுத்து அவருக்கு தங்கம் உறுதியாகி உள்ளது.
இதே போல பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை நந்திதா 7.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். தொடரில் வென்றதன் மூலம் அடுத்தாண்டு நடைபெறும் செஸ் உலகக்கோப்பை தொடருக்கு நந்திதா தேர்வாகியுள்ளார்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹர்ஷா பரத்கோடி, எஸ்.எல். நாராயணன், அதிபன் மற்றும் கார்த்திக் வெங்கடரமணன் ( இந்தியாவைச் சேர்ந்தவர்கள்) சம்சிதின் வோகிடோவ் ( உஸ்பெகிஸ்தான்) ஆகியோர் 6 புள்ளிகளை எடுத்துள்ளனர்.