fbpx

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா.? இதை மட்டும் பண்ணுங்க, பணம் கொட்டும்..!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலவிதமான கஷ்டங்களை தாண்டி தான் பலரும் பணத்தை சம்பாதித்து வருகிறோம். ஒரு சிலர் கடனாக நம்மிடம் பெற்ற பணத்தை கூட திருப்பி தராமல் இருக்கின்றனர். திடீரென்று நடக்கும் சுப காரியங்கள், மருத்துவ செலவு போன்ற திடீர் செலவுகளால், வந்த பணமும் வேகமாக செலவழிகிறது.

வீட்டில் வரவை விட செலவு அதிகமாக உள்ளது என்று கூறும் பல குடும்பங்களை கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு செலவு அதிகமாகாமல் வரவு அதிகரிக்க ஒரு சில பரிகாரங்களை செய்து வரலாம். அதாவது  பூஜை அறையில் பல தெய்வங்களின் படத்தை வைத்து வழிபட்டு வந்திருப்போம். ஆனால் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியின் படத்தை வைத்து செவ்வாய், வெள்ளி கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டு வரும் போது வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

மேலும் சங்கடகர சதுர்த்தி அன்று கற்பக விநாயகரை 1008 அருகம்புல் வைத்தோ அல்லது 21 அடி அருகம்புல் மாலையை சாற்றி வணங்கி வர தொழில் விருத்தி அடையும். நீண்ட நாள் வராமல் இருந்த பணமும் வந்து சேரும். அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை 11 அகல்விளக்கு தீபமேற்றி 11 முறை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் பணவரவு அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.

இரட்டைப் பிள்ளையாருக்கு சந்தன காப்பு செய்து வழிபட்டு வந்தால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை சாற்றி வந்தால் கடன் தொல்லைகள் நீங்கும். முருகப்பெருமானை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்கி வந்தால் தொழிலில் லாபம் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும், பண வரவும் அதிகரிக்கும். இவ்வாறு ஒரு சில பரிகாரங்களை செய்து வருவதன் மூலம் பணவரவு அதிகரிக்கும்.

Rupa

Next Post

"இனி சூரியனுக்கு அழிவே இல்லை" செயற்கையாக சூரியனை உருவாக்கிய கிராம மக்கள்.! எங்கு தெரியுமா.?!

Sun Jan 28 , 2024
இத்தாலி நாட்டில் விக்னலா என்ற கிராமம் உள்ளது. இங்கு 200 பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் இத்தாலிக்கும், சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையில் உள்ளது. விக்னலா கிராமத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை சூரிய ஒளி அதிகமாக இருக்காது. அந்த நேரங்களில் உறையும் குளிர் விக்னலா கிராம மக்களை நடுங்க வைக்கும் அளவிற்கு பனி பொழிகிறது. இதனால் இந்த கிராமமக்களும், அந்த நாட்டு அரசாங்கமும் முடிவு செய்து […]

You May Like