தெலங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் விடுமுறை அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, பண்டிகை தினத்தை முன்னிட்டு அக்டோபர் 13ஆம் தேதி முதல் முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜூனியர் கல்லூரிகளுக்கு முதல் பருவ விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜூனியர் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் விடுமுறை நாளில் எந்த வகுப்புகளையும் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஜூனியர் கல்லூரிகள் இந்த விடுமுறை அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.