fbpx

அடிப்பாவி நீ எல்லாம் ஒரு தாயா….? பச்சிளம் பெண் சிசுவை கிணற்றில் வீசிய கொடூர தாய்….!

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண் சிசுக்களை பாதுகாப்பது அனைவரின் கடமை என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அரசு சனி கவனம் செலுத்தி வருகிறது.

வயிற்றில் இருப்பது பெண் சிசு தான் என்று தெரிந்து விட்டால், பெண் சிசுவை கருவிலேயே அழித்து விடுவார்கள் என்பதால், வயிற்றில் இருப்பது ஆணா ?பெண்ணா? என்று தெரிவிப்பதற்கு கூட அரசு தடை விதித்து இருக்கிறது. இப்படிப்பட்ட காலத்தில் கூட, பிறந்த பெண் சிசுவை கொடூரமான முறையில் கொலை செய்யும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இருக்கின்ற ஒரு பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. பெண் பிள்ளைகளை சாபமாக நினைத்த காலம் மலை ஏறி போய்விட்டது. தற்போது பெண் பிள்ளைகளை வரமாக நினைக்கிறார்கள். ஆனால், இந்த காலத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது மன வேதனையை அளிக்கிறது.

துறையூர் அருகே பிறந்து ஒரு சில தினங்களை ஆன ஒரு பெண் குழந்தை கொடூரமான முறையில் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துறையூர் அருகே இருக்கின்ற பாலக்காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, ராணி என்ற பெண்ணுக்கு சொந்தமான தோட்டத்தில், ஒரு விவசாய கிணறு இருந்துள்ளது.

அந்தக் கிணற்றின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிலர் எதைச்சையாக அந்த கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது அந்த கிணற்றில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதன பிறகு, இது குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், தீயணைப்பு படை வீரர்களும், அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டு விட்டு, அதன் பிறகு தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, அந்த உயிரிழந்த நிலையில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர்.

பின்பு தான் அந்த சிசு ஒரு பெண் குழந்தை என்று தெரிய வந்தது. இதன் பிறகு, அந்த பெண் சிசுவின் உடலை காவல்துறையினரிடம் தீயணைப்பு படை வீரர்கள் ஒப்படைத்தனர். இதன் பின்னர் காவல் துறையினர், துறையூர் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண் சிசுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த பெண் சிசுவை கிணற்றில் யார் தூக்கி வீசி இருப்பார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

அதிரடியாக உயரும் PF தொகை..!! வெளியான செம குட் நியூஸ்..!! என்ன தெரியுமா..?

Wed Sep 20 , 2023
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இது அவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாக இருக்கும். 6.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ ​​மூலம் பயனடையப் போகிறார்கள். இபிஎஃப்ஓ, ஓய்வூதிய நிதியில் உச்சவரம்பு தொடர்பான முடிவை மிக விரைவில் எடுக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. PF இன் வரம்பிற்குள் அதிகமான மக்களைக் கொண்டுவர அரசாங்கம் விரும்புவதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இந்த திசையில், […]

You May Like