fbpx

Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… 5 மாவட்டத்தில் கனமழை…! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் வரும் 5-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவியது. இதனால், சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது. தற்போது, வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, வரும் 3-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 4, 5-ம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைப் பொழிவால் வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Atmospheric low pressure circulation… Heavy rain in 5 districts…! Warning issued by the Meteorological Department

Vignesh

Next Post

சட்டப்பேரவையில் இன்று வெடிக்கிறது கச்சத்தீவு விவகாரம்..!! தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர்..!! மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு..?

Wed Apr 2 , 2025
It has been reported that Chief Minister M.K. Stalin will bring a separate resolution in the Legislative Assembly today, urging the return of Katchatheevu.

You May Like