fbpx

தென்னை விவசாயிகள் கவனத்திற்கு…! கொள்முதல் கால அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழ்நாட்டில் 4.58 இலட்சம் எக்டர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சுமார் 3.34 இலட்சம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.கொப்பரையின் சந்தை விலை குறைந்த பட்ச ஆதரவு விலையை விடக் குறையும்போது தென்னை விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் விலை ஆதரவுத்திட்டம் (Price Support Scheme) செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி அரவைக் கொப்பரை கிலோ ரூ.108.60 என்ற வீதத்திலும், பந்துக் கொப்பரை கிலோ ரூ.117.50 என்ற வீதத்திலும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையத்திற்காக (NAFED) குறைந்தபட்ச ஆதரவு விலையில் ( Minimum Support Price) ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (Regulated Markets) மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் 01.04.2023 முதல் 30.09.2023 வரையிலான காலகட்டத்தில் 37,638 விவசாயிகளிடமிருந்து ரூ.597.225 கோடி மதிப்பிலான 54,993 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதலுக்கான கால அளவினை நீட்டிக்க வேண்டி தொடர் கோரிக்கை வரப்பெற்றதைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் அவர்களைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கொப்பரை கொள்முதலுக்கான இலக்கு 56,000 மெட்ரிக் டன்னிலிருந்து 90,000 மெட்ரிக் டன்னாக (அதாவது கூடுதலாக 34,000 மெ.டன்) உயர்த்தப்பட்டதுடன் கொள்முதல் செய்யும் கால அளவும் 26.11.2023 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அரசாணையும் 06.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள தென்னை அதிகம் சாகுபடி செய்யப்படும் 24 மாவட்டங்களில் உள்ள 75 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது கொப்பரைத் தேங்காயை விற்பனை செய்து பயனடையுமாறு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

'பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையை துண்டிக்கும் படங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன' அமெரிக்க அதிபர் பைடன்…

Thu Oct 12 , 2023
பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையை துண்டிக்கும் படங்களை பார்ப்பேன் என்று தான் நினைத்ததில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்தத் தாக்குதல் கொடூரமான கொடுமையின் பிரச்சாரம், பயங்கரவாதிகள் குழந்தைகளின் தலையை துண்டிக்கும் படங்களை உறுதிப்படுத்துவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. சனிக்கிழமை ஹமாஸ் குழு நடத்திய தாக்குதல் “கொடிய நாள்”, ஹமாஸ் பயங்கரவாதத் […]

You May Like