நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடலாம். ஆனால், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என்பது பொருந்தும். தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது.
விடுமுறை நாட்கள்…
3.3.2023 – சாப்சார் குட்
5.3.2023 – ஞாயிற்றுக்கிழமை
7.3.2023 – ஹோலி பண்டிகை
8.3.2023 – ஹோலி பண்டிகை மற்றும் Yaoshang 2வது நாள்
9.3.2023 – ஹோலி பண்டிகை
11.3.2023 – இரண்டாவது சனிக்கிழமை
12.3.2023 – ஞாயிற்றுக்கிழமை
19.3.2023 – ஞாயிற்றுக்கிழமை
22.3.2023 – யுகாதி விழா, பீகார் திவாஸ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு தினம்
25.3.2023 – நான்காவது சனிக்கிழமை
26.3.2023 – ஞாயிற்றுக்கிழமை
30.3.2023 – ஸ்ரீராம நவமி