fbpx

ஆசிரியர்களே கவனம்… வரும் 22 முதல் 27-ம் தேதி வரை அனைவருக்கும் கட்டாயம்…! வெளியான புதிய அறிவிப்பு…!

22-ம் தேதி முதல் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022- 2023-ம்‌ ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்‌ துறை மானியக்‌ கோரிக்கையின்‌ போது பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான துறையில்‌ பணிபுரியும் துணை இயக்குனர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக்‌ கல்விஅலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ தலைமை ஆசிரியர்கள்‌ என சுமார்‌ 12,000 பேருக்கு நாட்டின்‌ தலை சிறந்த கல்வியாளர்கள்‌ மற்றுல்‌ உதவியுடன் பணித்திறன் மேல்பாடு, தலைமை திறன், மேலாண்மை ஆகிய பொருண்மைகளில்‌ ஆண்டுதோறும்‌ உள்ளுறை பயிற்சி அளிக்கப்படும்‌ என்று தெரிவித்தார்.

2022-2023ஆம்‌ கல்வி ஆண்டின்‌ இறுதிக்குள்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை கருத்தாளர் பயிற்சி 22.08.2022 முதல் 27.08.2022 வரை விருதுநகர் மாவட்டம்‌, ராஜபாளையம்‌ வேங்கநல்லூரில்‌ உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில்‌ நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடி தூள்... இந்த 3 முக்கிய வங்கிகள் வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு...! முழு விவரம் இதோ...

Sun Aug 14 , 2022
ஆக்சிஸ் வங்கி நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. HDFC வங்கி உள்ளிட்ட 3 முக்கிய வங்கிகள், தங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடங்கும். 7 நாட்கள் முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 2.50% வட்டி விகிதத்தை […]

You May Like