fbpx

கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு…! போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு…!

இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் முழுமையாக இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும். இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

2024 ஆம் வருடம் வானில் நிகழ இருக்கும் அதிசயங்கள்.! வானியல் ஆய்வு மையம் வெளியிட்ட அபூர்வ தகவல்.!

Sun Dec 31 , 2023
வர இருக்கின்ற புத்தாண்டை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த ஆண்டில் விண்வெளியில் பல அரிய நிகழ்வுகள் நடக்க இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. வருகின்ற 2024 ஆம் ஆண்டில் கிரகணங்கள் முதல் பௌர்ணமி மற்றும் விண்கற்கள் பொழிவது போன்ற பல அதிசய காட்சிகள் விண்வெளியில் நடந்தேறும் எனவும் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தகவல் வெளியிட்டு இருக்கிறது. மேலும் 2024 ஆம் ஆண்டில் […]

You May Like