fbpx

12-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு ஆக்சிஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்… முழு விவரம்

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Axis Bank Branch Banking in Finance and Insurance பணிகளுக்கு என 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதார்கள் Personal Interaction மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 500 ரூபாய் ஆக விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 30.10.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=uSpNaXSItl8%3D&RowId=uSpNaXSItl8%3D&OJ=7k4L7QQ5IOM%3D

Vignesh

Next Post

கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை திருத்தப்பட்ட சிலிண்டர் விலை.. 45% விலை உயர்வு..

Sat Sep 3 , 2022
எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை திருத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. எனினும் இதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை 58 முறை வகையில் திருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஏப்ரல் 1, 2017 மற்றும் ஜூலை 6, 2022 […]
கேஸ்

You May Like