பிரபல விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே எழில் திருமண காட்சிகள் தான் ஓடிக்கொண்டிருந்தது.இந்த காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருந்தது .இந்த நெடுந்தொடரில் வில்லியான வர்ஷினியுடன் திருமணம் நடைபெறவிருந்ததை நிறுத்திவிட்டு எழிலுக்கு அவர் காதலித்து வந்த அமிர்தா என்ற பெண்ணுடன் திருமணத்தை நடத்தி வைத்தார் பாக்கியலட்சுமி.
அப்பாடா ஒரு வழியாக திருமணம் முடிந்தது என்று பெருமூச்சு விடுவதற்குள் பாக்கியலட்சுமியை தவிர்த்து குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை. அதனால் எழில் அமிர்தா உதட்டோர் மனக்கோளத்தில் வீட்டிற்கு வந்தால் பாட்டி அவர்களை வாசலிலேயே நிற்க வைத்து அப்படியே வெளியே போய் விடுங்கள் என்று தெரிவித்துவிட்டார்.. அதன் பிறகு அவரை சமாளித்து முடிப்பதற்குள் பாக்கியலட்சுமிக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.
உண்மையான திருமணம் என்றால் அனைத்து திருமணங்களிலும் மாப்பிள்ளை தான் பெண் கழுத்தில் தாலி கட்டுவார். ஆனால் இந்த நெடுந்தொடர் திருமணத்தில் தாலியை யார் கட்டினார்கள் என்பதை நீங்களே இந்த வீடியோவின் மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா தான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் நடக்கும் போல இருக்கிறது.