இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்களையும் அறிவித்து வருகிறது. அதன் படி செப்டம்பர் மாதத்திற்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் வங்கிக் கிளைக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், எந்தத் தொந்தரவும் ஏற்படாமல் இருக்க வங்கியின் விடுமுறை அட்டவணையைக் தெரிந்துகொள்வது நல்லது. நாடு முழுவதும் நெட் பேங்கிங் சேவைகள் மற்றும் ஏடிஎம்கள் எல்லா நாட்களிலும் செயல்படும். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி, திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ செப்டம்பர் 30 கடைசி தேதியாகும். இவற்றில் எத்தனை நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பும் என்பதைத் தீர்மானித்த பிறகு செப்டம்பர் 30 காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமா என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும்.
தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகளுக்காக செப்டம்பர் மாதத்தில் 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் சில மாநிலங்களில் உள்ள வங்கிகள், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி, விநாயக சதுர்த்தி, மகாராஜா ஹரி சிங் ஜியின் ஆண்டு விழா மற்றும் ஈத்-இ-மிலாத்-உல்-நபி ஆகியவற்றிற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படுகின்றன, அவை ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை.
செப்டம்பர் மாதத்தில் அனைத்து மாநில வாரியான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:
- செப்டம்பர் 3, 2023: ஞாயிறு
- செப்டம்பர் 6, 2023: ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி.
- செப்டம்பர் 7, 2023: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் Vd-8) மற்றும் ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி.
- செப்டம்பர் 9, 2023: இரண்டாவது சனிக்கிழமை.
- செப்டம்பர் 10, 2023: இரண்டாவது ஞாயிறு.
- செப்டம்பர் 17, 2023: ஞாயிறு.
- செப்டம்பர் 18, 2023: வர்சித்தி விநாயக விரதம் மற்றும் விநாயக சதுர்த்தி.
- செப்டம்பர் 19, 2023: விநாயக சதுர்த்தி.
- செப்டம்பர் 20, 2023: விநாயக சதுர்த்தி (2வது நாள்) மற்றும் நுகாய் (ஒடிசா).
- செப்டம்பர் 22, 2023: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம்.
- செப்டம்பர் 23, 2023: நான்காவது சனிக்கிழமை மற்றும் மகாராஜா ஹரி சிங்கின் பிறந்தநாள்.
- செப்டம்பர் 24, 2023: ஞாயிறு.
- செப்டம்பர் 25, 2023: ஸ்ரீமந்த் சங்கர்தேவாவின் பிறந்தநாள்.
- செப்டம்பர் 27, 2023: மிலாட்-இ-ஷெரிப் (முகமது நபியின் பிறந்த நாள்).
- செப்டம்பர் 28, 2023: ஈத்-இ-மிலாத் அல்லது ஈத்-இ-மிலாதுன்னபி (பரா வஃபத்)
- செப்டம்பர் 29, 2023: இந்திரஜாத்ரா / ஈத்-இ-மிலாத்-உல்-நபி
செப்டம்பர் மாதத்திற்கான வார இறுதி விடுமுறைகளின் பட்டியல்:
செப்டம்பர் 3: ஞாயிறு
செப்டம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
செப்டம்பர் 10: இரண்டாவது ஞாயிறு
செப்டம்பர் 17: ஞாயிறு
செப்டம்பர் 23: நான்காவது சனிக்கிழமை
செப்டம்பர் 24: ஞாயிறு