fbpx

வங்கிகளுக்கு 2 நாள் விடுமுறையா.? எப்போது இருந்து அமலுக்கு வர இருக்கிறது.? வெளியான புதிய அறிவிப்பு.!

இந்த வருடத்தின் இறுதியில் வங்கியில் பணியாற்றுபவர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கி ஊழியர்களுக்கான ஊதியம் 17 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

தற்போது வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக வங்கி ஊழியர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. இது தொடர்பான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் புறப்பட்டு வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கம் மற்றும் வங்கி வேளாண்மை குழு கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக வங்கி ஊழியர்களின் சம்மேளனம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.

இதற்கு முன்பு வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறையாக இருந்தது. மேலும் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டது.தற்போது இது மாற்றப்பட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதில் தீர்வு காணப்பட்டிருப்பதாகவும் வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்து இருக்கிறது.

Next Post

செல்போன் முழுவதும் ஆபாச படம்.! தட்டிக் கேட்ட கர்ப்பிணி மனைவி மீது கொடூர தாக்குதல்.! வங்கி ஊழியர் மீது பரபரப்பு புகார்.!

Wed Dec 13 , 2023
மயிலாடுதுறை அருகே கணவரின் செல்போனில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இருந்ததால் தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண் தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்விற்கு சென்று திரும்பி இருக்கின்றனர். அப்போது கணவனின் செல்போனை மனைவி எதிர்ச்சையாக பார்த்த […]

You May Like