ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருளாகும்.. சமீப காலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் சுவாரஸ்யமான பதில்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது..
கவிதை, கட்டுரை தொடங்கி ChatGPT செயலி, MBA தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது. இதனால் குறுகிய காலத்திலேயே அதிகமானோர் இந்த ChatGPT செயலியை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.. சிலர் இந்த சாட்போட்டின் திறன்களை பாராட்டி வந்தாலும், சிலர் அதன் எதிர்மறையான தாக்கங்களை பற்றி கவலைப்படுகிறார்கள்.
இதனிடையே உலகின் முதல் நாடாக இத்தாலி ChatGPTஐ தடை செய்தது.. ChatGPT தாய் நிறுவனமான OpenAI ‘பயனர்களிடமிருந்து தனிப்பட்ட தரவை சட்டவிரோதமாக சேகரிப்பதாக’ இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியது. இத்தாலிய அரசாங்கத்தின் கண்காணிப்புக் குழுவும் ChatGPT-ன் தரவு மீறலை உறுதியப்படுத்தியது.. எனவே OpenAI நிறுவனம் கூடுதல் தகவல்களை’ அளிக்கும் வரை இத்தாலியில் ChatGPT ஐத் தடை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. ChatGPTக்கு தடை விதிப்பது குறித்து இத்தாலிய அரசாங்கம் இறுதி முடிவை எடுப்பதற்கு முன், சாத்தியமான தீர்வுகளை காட்ட அந்நிறுவனத்திற்கு 20 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இத்தாலியில் விரைவில் ChatGPT சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இத்தாலிய பயனர்களின் தரவைப் பயன்படுத்தக்கூடாது எனவும், அதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க OpenAI நிறுவனம் ஒப்புக்கொண்டதால், ChatGPT மீண்டும் இத்தாலியில் அணுகப்படும்” என்று இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.. தங்கள் விதிமுறைகளுக்கு இணங்க OpenAI நிறுவனம் ஒப்புக்கொண்டுதால், இத்தாலியில் மீண்டும் ChatGPT செயலியை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது…