fbpx

உங்கள் வீட்டு நாய்களிடமும் உஷாரா இருங்க..!! 6 வார பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய ஹஸ்கி நாய்..!!

அமெரிக்காவில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த 6 வார பச்சிளம் குழந்தையை அந்த வீட்டின் செல்ல பிராணியான நாய் கடித்துக் குதறியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள டென்னிஸி மாகாணம் நாக்வில்லே பகுதியில் வசித்து வரும் நபர் மார்க். இவரின் மனைவி கிளோ மன்சூர். இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு எஸ்ரா மன்சூர் என்கின்ற ஒரு குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக ஹஸ்கி வகை நாய் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அந்த குழந்தை வழக்கம்போல் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது.

அப்போது, பச்சிளம் குழந்தையை அந்த வீட்டின் நாய் கடுமையாய் கடித்து குதறி உள்ளது. இதனால் படுகாயம் அடைந்த குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் உயிருக்கு போராடி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்..? வருமானத்தை அதிகரிக்கும் திசை எது தெரியுமா..?

English Summary

A 6-week-old baby who was sleeping in a crib in the United States was bitten by the house’s pet dog and died tragically.

Chella

Next Post

பறவைக்காய்ச்சலால் முதல் மரணம்!… 59வயது நபர் பலி!… உறுதிப்படுத்தியது WHO!

Thu Jun 6 , 2024
Bird Flu: மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த 59 வயதுடைய நபர் கடந்த ஏப்ரல் மாதம் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த நபருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24ம் தேதி உயிரிழந்தார். மேலும் இவருக்கு, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் வகை 2 நீரிழிவு […]

You May Like