fbpx

நாய்கள் ஜாக்கிரதை.. நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் கட்டையால் பெண் அடித்து கொலை செயல்பட்ட சம்பவம்..!

உத்தர பிரதேச மாநில பகுதியில் உள்ள கிஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால் முனியா(50) எனபவர். இவரின் பக்கத்து வீட்டில் செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு முனியா தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு நாயானது இவரை பார்த்து குரைத்துள்ளது. அதன் பின்னர் அவரை கடித்துள்ளது.

இதன் காரணமாக நாயின் உரிமையாளரிடம் முனியா வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதமானது இரு குடும்பத்திற்கும் இடையே பெரிய தகராறாக மாறி, கைகலப்பாக மாறியுள்ளது.

தகறாறு எல்லை மீறிய நிலையில், இரு தரப்பினரும் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். அவ்வாறு நிகழ்ந்த தாக்குதலில் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். 

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோசமான தாக்குதலுக்கு உள்ளான லால் முனியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து முனியாவின் மகன் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, பக்கத்து வீட்டு சிவசாகர் பிந்த் எனபவர் மற்றும் அவரது மகன் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மற்றும் ஒரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைக்கிறீர்களா..? அப்படினா இந்த 3 பழக்கங்களை மறந்துறாதீங்க..!!

Thu Jan 12 , 2023
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நிறைய பேருக்கு ஆரோக்கியம் குறித்த அக்கறை அதிகரித்திருக்கிறது. தினசரி ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதன் அவசியத்தை பலரும் இந்த சமயத்தில் புரிந்துகொண்டுள்ளனர். ஆனாலும், ஆரோக்கியம் குறித்த தீர்மானங்களை செயல்படுத்துவதில் பலர் தவறிவிடுகின்றனர். சில எளிய பழக்கவழக்க மாற்றங்கள் கூட ஆரோக்கியமாக இருக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கை உணவுகள் சில உணவுகளை சமைத்தோ, பதபடுத்தியோ சாப்பிடுவதைவிட அப்படியே நேரடியாக சாப்பிடுவது சிறந்தது என்று நிபுணர்கள் […]

You May Like