பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் பைசரன் புல்வெளியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் அதிக சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பயம் காரணமாக காஷ்மீரை விட்டு வெளியேறி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தலைமறைவாக உள்ளனர். இப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 26 பேரின் உயிரை பறித்த தீவிரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது. தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தகுந்த பதிலடி அளிக்கப்படும். பயங்கரவாதிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலால் பல அப்பாவிகளின் உயிர் பறிபோயுள்ளது. இந்த மிருகத்தனமான செயல் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது என டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.