fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! ஒரு நாளைக்கு ரூ.520 ஊதியம்…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Part Time Medical Consultant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் MBBS தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 520 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் நவம்பர் 3-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://careers.bhel.in/bhel/static/Detailed%20Advertisement%20CFP%202023.pdf

Vignesh

Next Post

குழந்தைகளின் பள்ளிப்பையில் கண்ணிவெடி வைத்த ஹமாஸ்!… வீடியோ வெளியிட்ட இஸ்ரேலிய பாதுகாப்புப் படை!

Mon Oct 23 , 2023
குழந்தைகளின் பள்ளிப்பைகளில் கண்ணிவெடியை வைத்து ஹமாஸ் அமைப்பினர் அப்பாவி பொதுமக்களை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலில், 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில், பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீது, […]

You May Like