இலவச பயிற்சி மற்றும் அது சார்ந்த திட்டம், அங்கீகரிக்கப்பட்ட திட்ட அமலாக்க முகமைகள் மூலம் நாடு முழுவதும் சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வந்தது. புதிய கல்விக் கொள்கை 2020, பயிற்சித் திட்டங்களை ஆதரிக்கவில்லை என்பதாலும், பயிற்சி வகுப்புகளின் தேவையை அகற்றுவதற்காக தற்போதுள்ள வாரிய மற்றும் நுழைவுத் தேர்வு முறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டதாலும் இந்த திட்டம் 2022-23 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.
இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் 2022-23 ஆம் ஆண்டிற்கு எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த சிறுபான்மை மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க முகமைகளுக்கு விடுவிக்கப்பட்ட நிதி ஆகியவை www.minorityaffairs.gov.in அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் மாநில வாரியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.