fbpx

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை உடனடியாக கரைக்கும் பூண்டு பால்.!

நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் ஏற்படும் சாதாரணமான பிரச்சினையாகிவிட்டது. ஆனால் உடல் எடை அதிகரித்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனாலே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இவ்வாறு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் செய்தாலும், ஒரு சில உணவு கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம்.

இதன்படி போதுமான அளவு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவு முறை, வேகமான வாழ்க்கை முறை போன்ற காரணங்களினால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை கூடுகிறது. இந்த கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது உடலில் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த கொழுப்பை குறைப்பதற்கு பூண்டு அருமருந்தாக இருந்து வருகிறது. எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?

ஒரு பாத்திரத்தில் 20 பூண்டு பல்லை நன்றாக உரித்து தோல் நீக்கி 1/4 லிட்டர் பாலில் போட்டு கொதிக்க விட வேண்டும். இதில் சர்க்கரை எதுவும் சேர்க்க தேவையில்லை. பூண்டு வெந்து பால் நன்றாக கொதித்து வற்றி வரும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த பூண்டு பாலை நன்றாக ஆறிய பின் எடுத்து குடிக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பாக இதை குடித்து வர உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு கொழுப்பு கரையும். மேலும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் இதைக் குடித்து வரலாம். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பூண்டு பால் கொடுத்து வர தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

Baskar

Next Post

இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்!… கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என எதிர்பார்ப்பு!

Thu Feb 1 , 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் குறித்து ஜனாதிபதி திரவுதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டி பேசினார். மேலும், உஜ்வாலா திட்டம் ,ஆயுஷ்மான் திட்டங்களின் நன்மைகள், பயனாளிகள் விவரங்களையும் பட்டியலிட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. மக்களின் வாழ்க்கையை […]

You May Like