fbpx

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் பீர்க்கங்காய்.! வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!

பொதுவாக காய்கறிகள் என்றாலே நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருளாகவே இருந்து வருகிறது. இந்த வகையில் குறிப்பாக பீர்க்கங்காயை நம்மில் பலரும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதில்லை ஆனால் பீர்க்கங்காயில் பல்வேறு நோய்களை தீர்க்கும் நன்மைகள் இருந்து வருகின்றன. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

பீர்க்கங்காய் செடியில் உள்ள இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவ குணம் மிக்கதாக கருதப்பட்டு வருகின்றது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீர்க்கங்காய் இலையை எடுத்து சாறு பிழிந்து லேசாக தண்ணீர் விட்டு சூடு படுத்தி தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.

பீர்க்கங்காயில் அனைத்து விதமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்றவை அதிகமாக இருந்து வருவதால் உடலை தாக்கும் பல்வேறு தொற்று கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் பீர்க்கங்காயை சாராக குடித்து வந்தால் மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள் குணமடையும்.

பொதுவாக பாகற்காய் தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பாகற்காய் கசப்பு சுவையில் இருப்பதால் பலருக்கும் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி உணவில் பீர்க்கங்காயை சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளின் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றதா.! வீட்டு வைத்தியத்திலேயே சரி செய்யலாம்.!?

Thu Feb 1 , 2024
பொதுவாக பெரியவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகின்றது என்று பலர் கூறுவதை பார்த்திருப்போம். தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உணவு பழக்க வழங்கத்தினால் குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு எளிமையான வீட்டு வைத்திய முறையிலேயே எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்? முதலில் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நோய் இருந்தால் உடனடியாக மருத்துவர் அணுகி அதற்கேற்ற தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் மலச்சிக்கல் பிரச்சனை மூல நோய்க்கு அறிகுறியாக கருதப்படுகிறது. […]

You May Like