fbpx

நாம் மறந்து போன பழைய சாதத்தில்.. இவ்வளவு நன்மைகளா.! எந்த உணவிலும் இல்லாத சத்து.!

மிக மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று பழைய சோறு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம். முதல் நாள் செய்த சாப்பாட்டில் தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் அதை ஊற வைத்து மறுநாள் அதை குடிப்பது பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும். மற்ற உணவு பொருட்களில் இல்லாத விட்டமின் பி11, பி12 ஆகிய சத்துக்கள் பழைய சோற்றில் அதிக அளவில் நிரம்பி உள்ளது. அதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதை சாப்பிடுவதன் மூலம் நமது செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து செரிமான மண்டலம் மேம்படுகிறது. 

பழைய சாதத்தில் நோய் எதிர்ப்பு காரணிகளை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. எனவே இது நோய் கிருமிகளிடமிருந்து நம்மை காப்பாற்றுகிறது. மாலை நேரத்தில் இந்த பழைய சோறை சாப்பிட்டால் வயிறு குறித்த பிரச்சினைகள் அனைத்தும் காணாமல் போகும். உடலில் சூடு அதிகமாக இருக்கும் நபர்கள் இதை சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்று கடுப்பு தொந்தரவு இருப்பவர்கள் இதை சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு பழைய சாதம் ஒரு அருமருந்து. தோல் வியாதிகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்களுக்கு பழைய சாதம் சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.

Baskar

Next Post

பெண்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி ரூ.12,000..!! மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..!!

Fri Jan 19 , 2024
விவசாயம் செய்து வரும் பெண்களுக்கு குட் நியூஸ் ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கி வரும் மத்திய அரசு, அதில் பெண் விவசாயிகளுக்கு இனி ரூ.12,000 வழங்கவுள்ளது. இது தொடர்பாக பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் முன்மொழிவுகள் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர், டிசம்பர்-மார்ச் மாதங்களில் மத்திய அரசின் […]

You May Like