fbpx

சில நிமிட சூரிய நமஸ்கார வழிபாடு.. இவ்வளவு நன்மைகளை உடலுக்கு தருகிறதா.! ஆச்சரிய தகவல்.!

இந்து மத வாழ்வியல் முறையில் அடிப்படை விஷயங்களில் ஒன்றாக இருந்து வந்தது சூரிய நமஸ்கார வழிபாடு. இது ஆகம ரீதியான நன்மைகள் என்று கூறப்பட்டாலும் அறிவியல் ரீதியாக நமது உடலுக்கு நிறைய நன்மைகளை வழங்கக்கூடிய விஷயம் என்றால் நம்ப முடிகிறதா.? இந்து மதப் படி சூரியன் கடவுளாக வணங்கப்படும் ஒரு விஷயம். சூரிய பகவான் வெப்பமானவராக உஷ்ணத்தை வெளிக்கொண்டு வரக்கூடியவராக கருதப்பட்டாலும் உலகத்தில் உயிர்கள் வாழ முக்கியமான விஷயமாக இருப்பவர். உலகம் உருவாகிய நாளிலிருந்து தேவர்களே வணங்கக்கூடிய தெய்வமாக இருப்பது சூரிய பகவான் தான். 

மாலை மற்றும் காலை வேலைகளில் சூரிய கதிர்களின் உஷ்ணம் குறைவாக இருக்கும். இதை உடலுக்கு வெப்பத்தை குறைவாக கொடுப்பதுடன் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் போன்ற சத்துக்களை தரவல்லது. எனவேதான் விடியற்காலையில் குளித்து முடித்தவுடன் வெற்று உடலில் சூரிய நமஸ்காரம் செய்வது முக்கியமான பழக்கமாக கருதப்படுகிறது. இதுபோல சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளும் போது உடல் முழுவதும் கதிர்கள் படும்.

அப்போது உடலுக்கு தேவையான ஆற்றலை சூரியனிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த வழிபாடு தோளில் இருக்கும் கிருமிகள் அழிந்து, உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். அதிகாலையில் ஒற்றை காலை உயர்த்தி மற்றொரு காலின் முட்டிக்கால் பக்கவாட்டில் ஒன்றை இரண்டு கைகளையும் மேலே தூக்கி கைகூப்பி வணங்கி சூரிய நமஸ்காரம் மேற்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் சூரியனின் வெப்பத்தை பற்றி நாம் உணர்ந்து கொண்டு இருப்பதால் தியான நிலையில் மற்ற சிந்தனைகள் இல்லாமல் போகும். 

எனவே மனம் ஒருங்கிணைக்கப்பட்டு, சாந்தி அடைகிறது. இது மனக்கட்டுப்பாட்டை நமக்கு ஏற்படுத்துகிறது. இதன் மூலம் நமக்கு மன அமைதி கிடைப்பதுடன், மன அழுத்தம், அலைபாயும் எண்ணங்கள், கவலை மிகுந்த நினைவுகள் உள்ளிட்டவை நம் மனதை விட்டு விலகும். மேலும் இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. எனவே உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் இதை பலரும் மறந்தே விட்டனர். நம் அடுத்த தலைமுறைகளுக்கு இந்த மறந்து போன பழக்கத்தை சொல்லிக் கொடுத்து அவர்களது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க உதவுவோம். சில நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த சூரிய நமஸ்காரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பதை மறந்து விடாதீர்கள்.!

Rupa

Next Post

மண் சட்டியில் சமைத்த உணவுகள் ஏன் சுவையாக உள்ளது தெரியுமா.? இவ்வளவு நன்மைகளா..!

Thu Jan 18 , 2024
அந்த காலத்தில் மண் சட்டியில் சமைப்பது இந்திய கலாச்சாரத்தில் சாதாரணமான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல வகையான பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவதால் உணவில் சுவைகள் குறைவதோடு, நோய்களும் ஏற்படுகின்றன. மண் சட்டியில் சமைத்த உணவுகள் சத்தானதாகவும், சுவையானதாகவும் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? பொதுவாக ஃபாஸ்ட் ஃபுட் என்று சொல்லப்படுகிற வேகமான உணவு முறை தான் இன்று பலரது வீடுகளிலும் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால் […]

You May Like