ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று என்றால் அது கால்சியம் தான். நமது உடலில் எலும்பு ஆரோக்கியம் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் அத்தியாவசியம். கால்சியம் சத்து அதிகம் நிறைந்த உணவுகளில் முக்கியமானது பால் மற்றும் ராகி. நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் பல பால் மற்றும் ராகியில் உள்ளது. ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. நாம் என்ன தான் கலந்து கொடுத்தாலும் பால் குடிக்க மாட்டார்கள்.
அப்படி உங்கள் குழந்தைகளும் அடம்பிடித்தால், நீங்கள் கட்டாயம் ராகி பயன்படுத்தலாம். இதனால் தான் பலர் குழந்தைகளுக்கு முதல் உணவாக ராகி கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகு, அவர்களுக்கு நாம் ராகி கொடுக்காமல், பால் மட்டும் தான் கொடுக்கிறோம். குழந்தைகள் வளர்ந்த பிறகு, கால்சியம் என்றாலே நாம் பாலை மட்டும் தான் நினைத்துக் கொள்கிறோம். அந்த வகையில், பால் மற்றும் ராகி எதில் நமக்கு அதிக அளவு கால்சியம் கிடைக்கிறது என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நாம் தினமும் பயன்படுத்தும் பாலில், புரதச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக கால்சியம் முக்கிய ஊட்டச்சத்தாக உள்ளது. அந்த வகையில், ஒரு கப் பாலில் கிட்டத்தட்ட 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இதனால் 1 கப் பால் குடிப்பதன் மூலம், நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைத்துவிடுகிறது. நமது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நாம் பாலினை தினசரி அருந்தலாம்.
அதே சமையம், 100 கிராம் ராகியில் கிட்டத்தட்ட 344 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பாலுடன் ஒப்பிடும்போது ராகியில் தான் அதிக அளவு கால்சியம் உள்ளது. மேலும், ராகியில் இரும்புச்சத்து மற்றும் நார்சத்து போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இதனால் நீங்கள் ராகியை தாரளமாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நீங்கள் ஒரு வேலை தினமும் காஞ்சி, கூழ் மட்டுமே கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதனால், நீங்கள் ராகி ரொட்டி, ராகி உருண்டை, ராகி தோசை, ராகி கஞ்சி, ராகி இட்லி, ராகி இனிப்பு வகைகள் என பல வடிவங்களில் தயாரித்து கொள்ளலாம்.
Read more: மூட்டுவலி, கால்வலி எல்லாம் காணாமல் போகும்.. இந்த ஊத்தாப்பம் சாப்பிட்டு பாருங்க..!